㽶Ƶ

Print
Category: FOMCA di Pentas Media 2025

செயற்கை தொழில்நுட்பத்தின் (ஏஐ) வழிகாட்டிகள் இருந்த போதிலும் அதை ஏன் அரசாங்கம் மக்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை என மலேசிய பயனீட்டாளர்கள் தரநிலை சங்கத்தின பொதுச் செயலாளர் செயலாளர் சாரா ஜேம்ஸ் கேள்வி எழுப்பினார். இந்த வழிகாட்டிகளை அரசாங்கம் மக்களிடம் பகிர்ந்து கொண்டால் தான் ஏஐ தொழில்நுட்பம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுமே என அவர் சுட்டிக் காட்டினார்.


இந்த வழிகாட்டிகளை தெரிந்து கொண்டால் மட்டுமே பள்ளிகள், நிறுவனங்கள் மற்றும் பாமர மக்கள் ஏஐ தொழில்நுட்பத்தை பொறுப்புடன் கையாள முடியும் என வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.


இந்த ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை வழிநடத்த முறையான சட்ட விதிமுறை தேவை. காரணம் பொய் மற்றும் முறைகேடுகளை தவிர்க்க இது மிக அவசியம் என அவர் சுட்டிக் காட்டினார்.


இது தொடர்பாக சட்ட விதிமுறைகள் அமலாக்கம் செய்யப்பட்டால் மட்டுமே ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தொழில் முனைவர்கள் இது குறித்து கருத்து வெளியிட முடியும் என அவர் சுட்டிக் காட்டினார்.


ஏஐ தொழில்நுட்பத்தின் ஆற்றல் குறித்து பள்ளிகள் மாணவர்களுக்கு நன்கு கற்றுத் தர வேண்டும். அதே வேளையில் இளைஞர்கள் இணையம் வழி அல்லது பிரச்சார உரைகளின் வழி இந்த தொழில்நுட்பத்தை நன்கு கற்றுக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக் காட்டினார்.


ஏஐ நுண்ணறிவு மிக்கது. ஆனால் மனிதர்கள் ஆற்றல் மிக்கவர்கள் என பிரதமர் கூறியுள்ளார். அதன் பயன்பாடு நம்மிடம் தான் உள்ளது என அவர் சுட்டிக் காட்டினார்.


இந்தியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் ஏஐ வழிகாட்டிகளை வெற்றிகரமாக அமலாக்கம் செய்துள்ளது.

மக்களுக்கு இது தொடர்பான வழிகாட்டிகளை விளக்கமாக தந்தால் மட்டுமே இதற்கான பலன் கிடைக்கும் என அவர் சுட்டிக் காட்டினார். இந்த நாடுகளின் ஏஐ வழிகாட்டிகளை மக்கள் எளிதாக அணுகி தெரிந்து கொள்ள முடியும் என அவர் சுட்டி காட்டினார்.